பிரதான செய்திகள்விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஓய்வு!

வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஒருநாள் உலகக் கிண்ண தகுதி காண் சுற்றுக்கான முதல் சுற்றில் ஓய்வெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை பங்கேற்கும் மூன்றாவது போட்டி நாளை (25) அயர்லாந்துக்கு எதிராக நடைபெற உள்ளது.

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி B குழுவின் கீழ் நடைபெறவுள்ளதுடன் முதல் சுற்றில் பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் இலங்கை அணி நாளைய போட்டிக்குள் நுழைகிறது.

அயர்லாந்து அணி இதுவரை கலந்து கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் நாளைய இலங்கைக்கு எதிரான போட்டியில் தோற்றால் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

B குழு புள்ளிகள் பட்டியலில் இலங்கை முதலிடத்திலும், ஸ்கொட்லாந்து மற்றும் ஓமன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

B குழுவின் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறவுள்ளன.

Related posts

அமைச்சர் ஹக்கீமின் தாய் மரணம்

wpengine

தேசபந்து தென்னகோனை தேடி சோதனை, விரைவில் கைது செய்யப்படுவார்!

Maash

ஆசிரிய நியமனம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

wpengine