Breaking
Sun. May 19th, 2024

4 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற்ற அவிசாவளை மாநகர சபையின் பதில் செயலாளரும், வருவாய் பரிசோதகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (23) குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பேருந்து நிலைய புதிய வர்த்தக கட்டிடத் தொகுதியில் வா்த்தகம் நிலையம் ஒன்றின் உாிமையை விரைவாக வழங்குவதற்காக இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

அவிசாவளை மாநகர சபையினுள் இலஞ்சம் பெறும் போதே குறித்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

A B

By A B

Related Post