(செட்டிகுளம் சர்ஜான்)
வவுனியா சின்னச்சிக்குளம் வ/தாருல் உலூம் முஸ்லிம் வித்தயாலயத்தின் 2015 (க,பொ,த,)சாதாரண தரப்பரீட்சையில் சித்தியெய்து பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நேற்று (11-04-2016) பாடசாலையின் அதிபர் எஸ்,எம்.ஜாபிர் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பரிசில்களை வழங்கி வைத்ததுடன் பாடசாலை சமூகத்தினால் அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமொன்றையும் வழங்கி வைத்தனர்.
பிரதம விருந்தினர் உரையில் தன்னாலான அனைத்து உதவிகளையும் பாடசாலைக்கு வழங்குவதாக காதர் மஸ்தான் உறுதியளித்தார்.
குறித்த நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ,செட்டிகுளம் கோட்டக் கல்வி அதிகாரி ஜேசுதாசன், செட்டிகுளம் மக்கள் வங்கி முகாமையாளர் அரூஸ், ஆண்டியா மு,வி,அதிபர் ஜின்னாஹ் உட்பட உயர் அதிகாரிகள், பெற்றோர்கள் மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.