Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

(அஷ்ரப் ஏ சமத்)

நேற்று (11)ஆம் திகதி திங்கற்கிழமை பிற்பகல் 04.30மணிக்கு றிபாய் ஹாஜியாரினால் இக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வு கல்லுாாி அதிபா் ஜனாபா நசிரா ஹசனாா் தலைமையில் நடைபெற்றது. றிபாய் ஹஜியாா் ஏற்கனவே பாத்திமா மகளிா் கல்லுாாிக்கும் ஒரு கட்டிடத்தை நிர்மாணித்துக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இக் கட்டிடத் திறப்பு விழாவில் அமைச்சா் ஏ.எச்.எம். பவுசி , அமைச்சா் ரவுப் ஹக்கீம், மேல் மாகாண முதலமைசச்சா் இசுரு தேசப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான், மேல்மாகாண கல்வியமைச்சா் , மேல்மாகண சபை உறுப்பினர்கள் நவ்பா் பவுசி, பாயிஸ், பைருஸ் ஹாஜி, அசமாம்டீன், மற்றும் பெற்றோா்கள் ஆசிரியா்களும் கலந்து சிறப்பித்தனா். அத்துடன் பாடசாலை ஆசிரியா்கள் இம்முறை சிறந்த க.பொ.த. உயா்தரம் சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவிகளுக்கும் பரிசில்கள் நினைவுச் சின்னங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.