Breaking
Sat. Apr 27th, 2024

கொரோனாவால் மரணமடைவோரை எரிக்கவும், அடக்கம் செய்யவும் முடியும் என்ற கோரிக்கையை உலமா கட்சி ஜனாதிபதியின் கவனத்துக்கு வியத்மக அமைப்பின் மூலம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவிக்கையில்,


கொரோனாவால் மரணமடையும் சடலங்களை அடக்கவும் முடியும் என்பதை உலக நாடுகளில் காணமுடியும். அதற்கிணங்க மரணித்தவரின் உறவினர் விரும்பினால் அடக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
இது பற்றி அனைத்து உயர் மட்டங்களிலும் சொல்லியுள்ளோம்.

அவ்வாறு அடக்கம் செய்யும் போது சரியான முறைப்படி அடக்கம் செய்யப்படுகிறதா என்பதை சுகாதார அதிகாரிகளும் தேவைப்பட்டால் பொலிசும் ராணுவமும் கூட முன்னின்று அவர்கள் மேற்பார்வையில் அடக்கம் செய்ய முடியும்.


இது பற்றி ஜனாதிபதியின் கவனத்துக்கு ஜனாதிபதியின் அமைப்பான வியத்கமவின் பிரமுகரான சரித்த மற்றும் பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல வேட்பாளர் டொக்டர் திலக் ராஜபக்ஷ அவர்களுடனும் உலமா கட்சி பேசியுள்ளது.


அத்துடன் கடந்த காலத்தில் முஸ்லிம்களின் பெரும்பாலான வாக்குகளை பெற்ற முஸ்லிம் கட்சிகளின் அடிவருடிகள் ஜனாஸா எரிப்பு விடயத்தை தூக்கிப்பிடித்து அதனை வைத்து அரசியல் செய்வதையும், அரச தரப்புக்களை குற்றம் சுமத்துவதையும் சுட்டிக்காட்டியதுடன் ஜனாதிபதி மனம் வைத்தால் எதிர்க்கட்சிகளின் இந்த சதிகளை முறியடிக்கும் விதத்தில் கொரோனா ஜனாஸாக்களை அடக்க அனுமதிப்பதன் மூலம் முஸ்லிம் மக்களின் பெரும்பாலான வாக்குகளை அரச தரப்புக்களுக்கு மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் இதனை நிறைவேற்றித்தந்தால் தாம் கட்டாயம் அரச தரப்புக்கு வாக்களிப்போம் என பல முஸ்லிம்கள் தமக்கு சொல்லியிருப்பதையும் இது பற்றி சமூக வலையத்தளங்களிலும் சொல்லப்படுவதையும் உலமா கட்சித்தலைவரால் விளக்கி கூறப்பட்டது.


இதில் உள்ள நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்டுள்ள அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் இந்த எதிர்ப்பார்ப்பை தாம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *