பிரதான செய்திகள்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்தல் விண்ணப்பம் திகதி நீடிப்பு

முதலாம் தரத்திற்கு பாடசாலை மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்ப திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

 

அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2018ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினத்தை எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி வரை நீட்டிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

இதேவேளை, இதற்கு முன்னர் இறுதி விண்ணப்ப தினமாக ஜூன் மாதம் 30 ஆம் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்த திகதியை நீடிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் விண்ணப்பங்களை நேரடியாக அதிபர்களிடம் கையளிக்க முடியும்.

கையளித்தமை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் வழங்குகின்ற ஆவணத்தையும் பெற்றோர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். அல்லது பதிவுத் தபால் மூலமாக இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அனுப்பி வைக்க முடியும் எனவும் அந்த ஊடக அறிக்கையில் கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மலையக அசீஸ்ஸின் 26வது நினைவு! மாணவர்களுக்காக உபகரணம் வழங்கி வைப்பு

wpengine

வஸீம் தாஜுதீன் அநுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

wpengine

அஸ்ஹர் பல்கலைக் கழகம் புலமைப்பரிசில்

wpengine