பிரதான செய்திகள்

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினருக்கும் மு.கா.கட்சிக்கும் தொடர்பில்லை

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த குண்டு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினருடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


கண்டி பிலிமத்தலாவை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


சில தரப்பினர் தேர்தல் வெற்றி பெறும் வழிமுறையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது அடிப்படைவாதம் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


இப்படியான குழுக்கள் எமக்கு மத்தியில் இருந்ததை எவரும் அறிந்திருக்கவில்லை. தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பிரசாரங்கள் காரணமாக முஸ்லிம் மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


முஸ்லிம் வீடுகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கத்திகள் இல்லை. இந்த கதையை கூட வெளியிட்டு குற்றச்சாட்டை சுமத்தினாலும் எப்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தளராது எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளர்.

Related posts

முந்தலில் இரகசியமாக புதைக்கப்பட்ட சிசு குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு!

Editor

மட்டக்களப்புக்கு நானே அனுப்பினேன்! எனது உத்தரவை யாரூம் மாற்ற முடியாது

wpengine

பஸ் மிதிபலகையில் பயணித்து தவறி விழுந்து படுகாயமடைந்தவர் மரணம் .!

Maash