Breaking
Fri. Apr 26th, 2024

NDPF – ஊடாகப்பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார நிலைமைகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா கொடுப்பனவாக 5000 ரூபா முதற்கட்டமாகவும், அதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படாதது தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு என்பன உரிய அரச அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர். அத்துடன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முழுமையான முடக்கத்திற்குள் இருந்தபோது, இடம்பெயர்ந்த மக்களும் பெரும் சிரமத்தையே எதிர்நோக்கியிருந்தனர். இதனை கவனத்திற்கொண்டு, இம்மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென, வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான பேரவைத் தலைவர் எஸ்.எச்.எம். மதீன், கடிதங்கள் மூலம் உரியவர்களை வலியுறுத்தி வந்த நிலையில், இந்த கொடுப்பனவானது நாளை முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு புத்தளம் வாழ் இடம்பெயர்ந்த மன்னார் மாவட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மற்றும் சமுர்த்தி ஆணையாளர் போன்றோரின் தலைமையில் பின்வரும் இடங்களில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது…

16.06.2020திகதி (செவ்வாய்க்கிழமை) கல்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கான கொடுப்பனவு #நுரைச்சோலை ம.வி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும்….

17.06.2020 திகதி (புதன்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஹிதாயத் நகர் மு.ம.வி இலும்

18.06.2020 திகதி (வியாழக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை வேப்பமடு அர்ரஹ்மான் மு.ம.வி இலும் வழங்கப்படவுள்ளது…

இதனைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் குறித்த நிலையங்களுக்கு செல்லவும்

தகவல்.
எஸ்.எச்.ஏ. மதீன்
வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை(NDPF)

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *