பிரதான செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் சமிந்த எரங்க வைத்தியசாலையில்

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த எரங்க, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்னும் இரு நாட்களில் நொடின்கேம் நகரில் (Nottingham) ஆரம்பிக்கவுள்ளது.

இந்தநிலையிலேயே இருதயத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் இங்கிலாந்திலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்சானும் தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக கடந்த மே மாத இறுதியில் அறிவித்தார்.

அத்துடன், தம்மிக்க பிரசாத் மற்றும் துஷ்மந்த சாமர ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து முன்னதாக விலகியுள்ள நிலையில், எரங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையானது இலங்கை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது.

இதேவேளை, இங்கிலாந்துடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சமிந்த எரங்கவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர், நாளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

26வருட பூர்த்தி! வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் இனவாதிகள்-உலமா கட்சி

wpengine

தனிக்கட்சியாக போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அரசியல்வாதிகள் மகிந்தவை சூழ்ந்துள்ளனர்: பண்டார

wpengine

ஒலிம்பிக்கில் எமது நாடு பதக்கம் பெறவில்லை. விளையாட்டுத்துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன ? ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்.

wpengine