Breaking
Sat. May 4th, 2024

முன்னாள் அரசியல் கூத்தாடியான ஊடகவியலாளர் ஒருவரினால் தனியார் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் நடாத்தப்பட்டு வரும் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் முன்னுக்குப் பின்னான கருத்துக்களைக் கூறி நேயர்களிடம் வகையாக மாட்டிக் கொண்டார்.

மகிந்த ராஜபக்சவின் அரசில் முஸ்லிம்களுக்கெதிரன அட்டூழியங்களை தாங்க முடியாதே தான் அந்த அரசிலிருந்து வெளியேறி மைத்திரி – ரணில் நல்லாட்சியை “தவக்கல்து அல்லாஹ்” எனக்கூறி உயிரையும் பொருட்படுத்தாது ஆதரிக்க ஓடோடி வந்ததாக கூறினார். இவ்வாறு கூறி சிறிது நேரத்தின் பின்னர் இன்னொரு கட்டத்தில் மைத்திரியின் சம்மதத்துடன் ரணிலுடன் பேசி தனக்கு கபினட் அமைச்சர் பதவி ஒன்று தருவதாகவும் வன்னி மாவட்ட பிரமுகர்கள் ஐவருக்கு திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தலைவர் பதவி தருவதாக மைத்திரியும் ரணிலும் வாக்குறுதி அளித்ததாலேயே தான் மைத்திரியை ஆதரித்ததாகவும் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் தங்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கட்சியுடன் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு செயலாளர் நாயகம் சுசில் பிரேம ஜயந்தவுடன் ஒப்பந்தமொன்றை செய்ததாகவும் அவர் கூறினார். வேண்டுமென்றால் இதற்கான ஆவணங்களை வெளிப்படுத்துவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

”அல்லாஹ் – ரஸூல் – சமூகம்” என்று அடிக்கடி கூறிவரும் ஹுனைஸ் பாரூக்கின் இரட்டை நாக்கு இன்று எல்லோருக்கும் புரிந்து விட்டது.

இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் அரசியல் கூத்தாடிக்கு ரிஷாட் பதியுதீன் என்றால் வேப்பங்காய். கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் அமைச்சர் ரிஷாடலரி மாளிகையில் வைத்து உன் கூத்தாடித்தனத்தை இன்றுடன் விட்டுவிடு என்று கூறி நல்ல சாத்து சாத்தினார். ஆனாலும் இன்னும் இவர் திருந்தியதாகத் தெரியவில்லை.

இன்றைய நிகழ்ச்சியில் முற்றுமுழுதாக அமைச்சர் ரிஷாட்டை மையமாக வைத்தே அவர் கொன்னிக் கொன்னி கேள்விகளை தொடுத்திருந்தார். அதற்கு அவர் தெரிந்தெடுத்த கோடரிக்காம்பே இந்த ஹுனைச் பாரூக். வாழ்க இருவரும்!!!

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *