பிரதான செய்திகள்

அமைச்சர் ஒருவரின் காரின் பெறுமதி 4.5கோடி ரூபா

தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவரிடம் மிகவும் ஆடம்பர கார் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம Aston martin DB 11 convertible ரக காருக்கு சொந்தக்காரர் என தெரியவந்துள்ளது.

இந்த வகையான கார் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த காரின் தயாரித்த நாட்டிலேயே கொள்வனவு செய்யும் போது அதன் பெறுமதி இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பெறுமதியில் சுங்க வரிகள் சேர்க்கப்படாமல் 4.5 கோடி ரூபாவாகும். வரிகள் சேர்க்கப்பட்டால் மேலும் பல கோடிகளை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இத்தனை கோடி ரூபா பெறுமதியில் கார் உள்ளமை தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாராள குமார் வெல்கம போட்யிட கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லாட்சி அரசின் நடவடிக்கை குறித்து ஐ.நா.விடம் அமைச்சர் றிஷாட் முறையீடு

wpengine

வவுனியாவில் 13வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

wpengine

வவுனியா குளத்தில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்.!

Maash