Breaking
Sat. May 18th, 2024

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்த விவகாரத்தில் சவுதி அரசு மீது உலகநாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சவுதி அரசாங்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயுதங்களை தற்காலிகமாக நிறுத்தி ஜேர்மன் சான்சிலர் உத்தரவிட்டார்.
சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஜேர்மனி நான்காவது பெரிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவு கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆயுத ஏற்றுமதி நடக்கவில்லை.

இந்நிலையில் பேர்லினுக்கு சென்றிருந்த பிரித்தானிய வெளியுறவு செயலாளர் Jeremy Hunt, சவுதி மற்றும் ஜேர்மன் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது.

எனவே, ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஜேர்மன் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *