Breaking
Mon. Nov 25th, 2024
(மறிச்சுக்கட்டியான்)
கண்களை மூடிக்கொண்டு இருட்டுக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் கருப்புப் பூனைகள் போன்று வில்பத்துப் பிரச்சினையில் இத்தனை வருட காலம் கண்களை மூடிக்கொண்டும் காதுகளையும் பொத்திக்கொண்டும் இருந்து வந்த ஹக்கீம் காங்கிரஸின் சமூகத் துரோகிகள், வில்பத்து வடக்குப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் காணிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பறிக்கப்பட்ட பின்னர் இப்போது தான் தாமும் விழித்தெழுந்தது போல நடிக்கிறார்கள்.

ஹக்கீம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் தொடக்கம் அக்கட்சியில் இறுதியாக இணைந்து கொண்ட முசலி மண்ணின் கோடரிக்காம்பு ஹுனைஸ் பாரூக் வரை “வில்பத்து ரிஷாட்டின் நாடகம்” எனக் கொக்கரித்துத் திரிந்தவர்களே!

மின்னலிலும், அதிர்விலும், கல்முனையிலும், பொத்துவில்லிலும் இந்தப் புராணத்தையே படித்தார்கள். அமைச்சர் ரிஷாட்டை மோசமாக சாடினார்கள்.

கொழும்பில் இருந்து முசலி முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரதேசத்திற்கு பௌத்த தேரர்களை கொண்டு வந்தவரும் இந்த ஹுனைஸ் பாரூக் தான். அவரது அடியாள் ஒருவர் தேரரின் வாகனத்திற்குள் மஞ்சள் சீலையை சுற்றிக்கொண்டு இருந்ததற்கும்  ஆதாரங்கள் இருக்கின்றன.

அமைச்சர் ரிஷாட்டை பழி வாங்குவதற்காக தான் பிறந்து வாழந்த மண்ணில் வாழச் சென்ற முஸ்லிம் மக்களை காட்டிக் கொடுத்த கோடரிக்காம்புதான் இந்த ஹுனைஸ். அதற்காகத் தான் நேற்று (02) மறிச்சுக்கட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அவரை ஓடோட விரட்டினர்.

தலை தெறிக்க கொழும்புக்கு ஓடி வந்த அவர், கொழும்பில் ரங்காவின் வேட்டிக்குள் புகுந்து கொண்டு ரிஷாட்டைத் தூற்றினார். “மின்னலில்” வந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு இடியைப் போட்டார். பின்னர் அதே இரவு வசந்தம் தொலைக்காட்சியில் “அதிர்வு” நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முஷர்ரபிடம் வசமாகவும் வகையாகவும் மாட்டிக்கொண்டார். சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் வாதங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பேந்தப் பேந்த முழித்தார். மொத்தத்தில் அவர் அந்த நடு நிசியில் மூக்குடைப்பட்டார். அதிர்வு நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகளுக்கு திரு திருவென முழித்ததைப் பார்த்து ஹக்கீம் காங்கிரஸ்காரர்கள் கண் கலங்கியதாக தகவல்.

மறிச்சுக்கட்டியிலிருந்து விரட்டப்பட்ட நிலையில் கட்டுக்கரைக் குளக்கட்டில் நின்று கொண்டு குளத்துக்குள் பாயலாமா என யோசித்த அவர் உயிரை மாய்ப்பதற்குத் துணிவில்லாமல் லீடருடன் தொடர்பை ஏற்படுத்தினார்.

“லீடர், எனக்கு ஊர்ப் பக்கம் தலைகாட்ட முடியாமல் இருக்கின்றது. ஊரான்கள் என்னை விரட்டுகின்றார்கள் சேர். யாரின் காலைப் பிடித்தாவது ஜனாதிபதியைச் சந்தித்து உங்கள் காங்கிரசும் இந்தப் பிரச்சினையில் அக்கறையுடன் இருப்பதாகவும், தலையிட்டதாகவும் நாம் வெளியுலகத்திற்குக் காட்ட வேண்டும்” எனக் கெஞ்சினார்.

ஹுனைஸின் பரிதாப நிலையை அறிந்த ஹக்கீம், அவரை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டுமென நினைத்தார். அவர் ஜனாதிபதியை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்ற போதும் தனது சாணக்கியத்தை பயன்படுத்தினார்.

ஜனாதிபதியின் செயலாளரை எப்படியாவது சந்திக்கவும் டைம் எடுத்தார்
“வில்பத்துப் பிரச்சினையில் ரவூப் ஹக்கீமை தலையிடச் சொல்லுமாறு ஜம்இய்யதுல் உலமாவிடம் ரிஷாட் கெஞ்சியதாக கல்முனையில் வைத்து ஹரீஸ் கூறியதையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
இந்த நிலையில் தான் ஜம்இய்யதுல் உலமாவும் முஸ்லிம் சிவில் சமூகமும் ரிஷாட், ஆசாத்சாலி, முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் சந்தித்த அதே அபயக்கோனைத்தான் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி” என்ற நிலையில் முஸ்லிம் சமூகத்தின் காவலாளிகள் என தம்பட்டம் அடிக்கும் இந்த ஏமாற்றுக் கூட்டமும் சந்தித்துள்ளது.

அமெரிக்காவுக்கு விஜயம் செய்யத் தீர்மானித்துள்ள தங்களது ஹக்கீம் காங்கிரஸ் தலைவர் நாடு திரும்பியவுடன் கொழும்பில் இருந்து டெக்னிகல் டீமுடன்  ஹக்கீம் காங்கிரஸ் கட்சியினர் வில்பத்துவுக்குச் சென்று அந்தக் காட்டினை அளந்து மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் எல்லை போட்டு பிரித்துக் கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளதாக ஹுனைஸ் பாருக் அறிவித்துள்ளார்.

முசலி மக்களை இறைவன் தான் காப்பாற்ற் வேண்டும், இன்ஷா அல்லாஹ் பிரார்த்திப்போம்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *