பிரதான செய்திகள்

பெண்களின் உரிமைக்கு முக்கியத்துவம் வழங்குவோம் கவனயீர்ப்பு போராட்டம்

உலக பெண்கள் தினத்தினை முன்னிட்டு யாழ் மாவட்ட வெகுசன பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் பெண்களின் உரிமைக்கு முக்கியத்துவம் வழங்குவோம் என்னும் கருப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இது யாழ் மாவட்ட வெகுசன பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் சாந்தா ஆரோக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பெண்களுக்கெதிரான வன்முறையாளராக எமது ஆண்கள் மாற அனுமதிக்கமாட்டோம், ஜனாதிபதி அவர்களே பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கான துரித நீதியினை வழங்க வேண்டும், சிறு பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சனையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம், சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள வழக்குகள் உடனடியாக விசாரணைக்கு வரும் வகையில் விசேட சட்டத்தரணிகள் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற வாசகத்துடனான பதாதைகளுடன் பெண்கள் மற்றும் ஆண்களும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்டிருந்த பெண்கள் கறுப்பு துணியினை கட்டியிருந்தனர்.

Related posts

இலங்கை அபிவிருத்தி வாய்ப்பை மேற்கொள்ள தயாராக உள்ள அதானி! தகவல் இல்லாத நிலையில் விலக முடிவு!

Maash

அமைச்சர் ஹக்கீமின் பொய் வாக்குறுதி! ஏன் முசலியினை மறந்தார்

wpengine

முஸ்லிம் குடியேற்றத்திற்கு எதிராக தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்! பின்னனியில் தமிழ் தலைமைகள்

wpengine