செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது . !

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவன் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகர அவர்களின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சாரங்க ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான திசாநாயக்க (37348), ரன்வெல (61518), பொலிஸ் கொன்தாபிள்களான சிந்தக (78448), விதுசன் (91800), சாரதியான திஸாநாயக்க (18129) ஆகியோர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வவுனியா, தோணிக்கல் பகுதியில் 34 வயதுடைய இளைஞன் ஒருவன் 2 கிலோ கஞ்சாவுடன்  கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளின் பின் இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Related posts

வடக்கு,கிழக்கு கோத்தாவின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.

wpengine

பத்தொன்பதைப் பழிவாங்கும் “எக்ஸிகியூடிவ்” மனப்பாங்கு

wpengine

அமைச்சர் றிஷாட் பற்றி போலியான செய்திகளை வெளியிடும் இணையதளம்,சமுக வலைத்தளம்

wpengine