பிரதான செய்திகள்

ஜயரத்ன ஹேரத் MPஇன் வாகனம் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்!

பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிfபென்டர் ரக வாகனம் சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வாரியபொல நகரில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பான நேற்று இரவு 9.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த டிfபென்டர் வாகனம் அதிவேகமாக பயணித்ததன் காரணமாக முன்னால் சென்ற சிறிய லொறியுடன் மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த 5 பேரும், பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார்,ஆயுதப்படைகளுக்கு அதிகாரம்

wpengine

யாழ் சின்னத்தில் தமிழ் காங்கிரஸ் வேட்புமனு

wpengine

வடமாகாண பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine