Breaking
Sat. Apr 20th, 2024

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச தனது 34 வயதில், 3400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டு மக்களின் சாபத்துடன் யோசித ராஜபக்ச இன்றைய தினம் தனது 34 வயது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தனது வயதிற்கு ஏற்ப அவர் 3400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கும் சொந்தக்காரர் என குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு வன்முறை சம்பவத்தின் பின்னணியில் யோசித

3400 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான மகிந்தவின் மகன்

கடந்த 9ஆம் திகதி அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதான திட்டங்களை மேற்கொண்டவர் யோசித ராஜபக்ச என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் யோசிதவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

அனைத்தையும் திட்டமிட்ட யோசித 9ஆம் திகதி அதிகாலை சிங்கப்பூர் ஊடாக மெல்பேர்ன் நகரத்திற்கு சென்ற நிலையில் அங்கிருந்து பெர்த் நகரத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மே மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு வந்த யோசித காணி ஒன்று தொடர்பில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் காதலியி்ன் பெயரில் காணி கொள்வனவு

3400 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான மகிந்தவின் மகன்

யோசித தனது முன்னாள் காதலி யஸாரா அபேநாயக்கவுடன் காணி ஒன்றை அப்போதைய காலப்பகுதியில் கொள்வனவு செய்திருந்தார். ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விருப்பம் இல்லாமையினால் காதல் தொடர்பு முடிவுக்கு வந்தது.

8 வருடங்களுக்கு முன்னர் வேறு ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் இருந்த வீட்டில் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும் போதைப் பொருளுக்கு அடிமையான அவரது மகனும் பாதுகாப்பிற்காக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி நாட்டிற்கு வந்த யோசித இரண்டு வாகனங்களில் அடியாட்களுடன் அந்த வீட்டிற்கு சென்று தந்தையையும் மகனையும் வெளியேற்றுவதற்கு முயற்சித்துள்ளார்.

தலைதெறிக்க ஓடிய யோசித

எனினும் முன்னாள் இராணுவ அதிகாரி அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார். 8 வருடங்கள் தொடர்ந்து இந்த வீட்டில் இருந்தமையால் அது எங்களுக்கே சொந்தமாகி விடும்.  முடியும் என்றால் எங்களை சுட்டுக்கொல்லுங்கள் என கத்தி கூச்சலிட்டுள்ளார்.

இதனால் சத்தம் கேட்டு அயலவர்கள் வெளியே வந்தவுடன், வந்த வேகத்திலேயே யோசித உட்பட குழுவினர் அங்கிருந்து சென்றுள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *