இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் பஸ் டிப்போ ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் டிப்போவிற்கான கணக்காளர் அலுவலகம் ஒன்றை அமைத்து தருமாறு வலியுறுத்தி இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
தமக்கான கணக்காளர் அலுவலகம் வவுனியாவில் காணப்படுவதால், தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மன்னார் டிப்போ ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போ ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பாலசுப்ரமணியம் டெனிஷ்வரனிடம் வன்னி நியூஸ் செய்தி பிரிவினர் வினவிய போது ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது என குறிப்பிட்ட வட மாகாண போக்குவரத்து அமைச்சர், அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பதாவும், விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் தெரிவிக்கையில் பாடசாலை மாணவர்கள் ,அரச அதிகாரிகள் மற்றும் நோயாளிகள் பல்வேறு சிறமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள். ஆகவே தொழில் சங்கங்கள் எடுத்த உடனே இப்படியான போராட்டங்களை முன்னேடுக்க கூடாது எனவும் தெரிவித்தார்.