Breaking
Fri. Apr 26th, 2024

றகர் வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் சாட்சிகளை மறைத்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள, நாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு முன்னாள் பிரதானி, பொலிஸ் பரிசோதகர் சுமித் பெரேரா எதிர்வரும் 12ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த பொலிஸ் அதிகாரியால் வழக்கப்பட்டுள்ள வாக்குமூலம் முரண்பாடாக உள்ளதாக, இரகசியப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர் இந்தக் கொலை தொடர்பில் தகவல் அறிந்திருப்பாரா என சந்தேகம் எழுவதாகவும், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் நாட்டின் சட்டத்திற்கு இணங்க கடமை புரிந்த ஒருவர் எனவும், அவரை பினையில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த வழக்கை எதிர்வரும் 12ம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.

அன்றையதினமே பிணை மனுவை சமர்ப்பிக்குமாறும் நீதவான் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *