பிரதான செய்திகள்

றிஷாட் மனைவி உட்பட 4பேருக்கு! ஒகஸ்ட் 23 வரை மறியல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நால்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான  உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வவுனியா விதை வங்கிக்கு சென்ற வெளிவிவகார அமைச்சர்.

wpengine

சம்பந்தனை கூட்டமைப்பில் இணைத்த ரூபன் திருமலையில் மீன் சின்னத்தில் போட்டி.

wpengine

கைது செய்யப்பட்டதுக்கு எதிராக 100 மில்லியன் இலப்பைக் கோரும் பிள்ளையான்.

Maash