Breaking
Sun. May 12th, 2024
(ஏ.எம்.றிசாத்) 
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் போது முசலிப்பிரதேசத்தை விட்டு மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து புத்தளம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வசித்து வந்தனர்.

யுத்தம் முடிந்ததன் பின்னர் மீண்டும் தமது  சொந்த இடத்தில் மீள் குடியேறி வருகின்றனர் இந்த மக்களுக்கு பல தேவைகள் இருக்கின்றது முசலிப்பிரதேசம் யுத்தத்தின் மூலம் பல துன்பங்களை கண்ட பிரதேசம் மக்கள் வாழ்ந்தமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லாமல்  காடுகளாக காட்சி  தந்த பிரதேசம் தான்  முசலி இந்த மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அரசியல் விடயங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அனைத்து அரசியல் தரப்பினர்களின் கடமையாகும்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகமான உதவிகளை இந்தமக்களுக்கு செய்து இருக்கின்றார் செய்தும் வருகின்றார்.அவரிடம் மட்டும்   இந்த மக்களை ஒப்படைத்துவிட்டு அவர் செய்யும் சேவைகளை விமர்சனம் செய்யும் அரசியல் தலைமையாக முஸ்லிம்  காங்கிரசின்  தலைமை இருக்கிறது இவ்வாறு விமர்சன அரசியலில் மட்டும் காலத்தை கடத்திவிட்டு தேர்தல் காலங்களில் அபிவிருத்தி அரசியல் பேசும் தலைமைதான் மு.கா. வின் தலைவர்.

முசலிப்பிரதேச அபிவிருத்தியில் முஸ்லிம் காங்கிரசின் பங்களிப்பு என்ன கடந்த காலத்தில் தபால் அமைச்சராக இருந்தவர் அமைச்சர் ஹக்கீம் சிலாபத்துறை தபால் நிலையத்தை புனரமைத்தாரா அல்லது  முசலிப்பிரதேசத்தில் எந்த இடத்திலாவது ஒரு தபால் நிலையத்தையாவது அமைத்தாரா இல்லை என்ற பதில் தான்  அதேபோல்  நீதியமைச்சராக அமைச்சர் ஹக்கீம் இருந்த காலத்தில் முசலிப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்காவது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதா இல்லை நீதிமன்ற கட்டிடம் முசலியில் அமைக்கப்பட்டதா எதையுமே இந்த தலைமை செய்ய வில்லை.

இன்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சராக இருக்கும் அமைச்சர் ஹக்கீம்  முசலிப்பிரதேச அபிவிருத்திக்கு எதையெல்லாம்  செய்திருக்க வேண்டும். எதையும் செய்ய வில்லை இன்று சிலாபத்துறை நகர்  மோசமாக பாதிப்படைந்து இருக்கின்றது மழைகாலம் நீர் ஓடமுடியாது மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதை யார் செய்திருக்க வேண்டும்  செய்ய வில்லை செய்யவும் மாட்டார் முசலிப்பிரதேசம் பற்றி எந்த திட்டமும் அமைச்சர்  ஹக்கீமிடம்  இல்லை  அதைப்பற்றிய அக்கறையும் இல்லை முசலிப்பிரதேசத்தில் தேர்தல் மேடைகளில் வீறாப்பாய் அரசியல் பேசி மக்களை ஏமாற்றும் தலைமை அமைச்சர் றிஷாட் பதியுதீன் செய்கின்ற அனைத்து விடயத்தினையையும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு முசலிக்கான அபிவிருத்தியை திட்டமிட்டு மேற்கொள்ள அமைச்சர் ஹக்கீமும் அவர் சார்பு கட்சி உறுப்பினர்களும் முன்வர வேண்டும்.

அமைச்சர் ஹக்கீம் அவர்களே செய்யுங்கள் அல்லது செய்பவர்களை செய்ய விடுங்கள் குழப்பவாதியாக உங்கள் அரசியல் ஆசைக்கு எங்கள் மக்களை இரையாக்கி விடாதீர்கள்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *