Breaking
Thu. Apr 25th, 2024

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது

பதவி, பணம், அதிகாரம் எவரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு பின்னால் அலைந்து திரிவதும், புகழ்வதும், அவர்கள் மூலமாக சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்வதும், பின்பு அதிகாரத்தை இழக்கின்றபோது அவ்வாறானவர்களை கைவிட்டுவிட்டு புதிதாக அதிகாரத்துக்கு வருகின்றவர்களுக்கு பின்னால் அலைமோதுவதும் சாதாரண மனித இயல்பாகும்.

அது மட்டுமல்லாது அதிகாரிகளை தங்கள் வசப்படுத்திக் கொள்வதற்காக மற்றவர்களைப்பற்றி கோள் கூறுவதனையும், மூட்டி விடுவதனையும் பின்பு அதிகாரிகள் மூலமாக மற்றவர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி அதன் மூலம் இன்பம் காண்பதனையும் நாங்கள் அன்றாடம் காண்கின்றோம்.

இவ்வாறானவர்களிடம் மனிதாபிமானம், அன்பு, கருணை, இரக்கம் போன்றவைகளை எதிர்பார்க்க முடியாது. அதிகாரம் இருக்கும் வரைக்கும் தன்னை ஒரு விசுவாசி போன்று போலி விசுவாசம் காண்பிப்பார்கள் அதாவது நன்றாக நடிப்பார்கள். ஆனால் அதிகாரங்களை முழுமையாக இழக்கின்றபோதுதான் இவ்வாறானவர்களின் உண்மையான சுயரூபத்தினை உணர முடியும்.

தென்கிழக்கு பலகலைக்கழக வரலாற்றில் உபவேந்தர்களாக பதவியில் அமர்கின்றபோது அவர்களை முண்டியடித்துக்கொண்டு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு முகஸ்துதி பாடுவார்கள். ஆனால் உபவேந்தரின் பதவிக்காலம் முடிவடைகின்றபோது அவரது சேவைகளை பாராட்டி வழியனுப்பும் பாரம்பரியம் தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை.

அதாவது எதிரிப்படைகள் நாட்டை கைப்பெற்ற படையெடுக்கின்றபோது எதிர்த்துநின்று போர்செய்ய முடியாமல் ஆட்சித் தலைவர் நாட்டைவிட்டு தப்பி ஓடுவதுபோன்ற தோற்றப்பாடுதான் இதுவரையில் காணப்பட்டது.   

அந்தவகையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் தனது பதவியின் இரண்டு பருவ காலங்களான ஆறு வருடங்களை நேற்றுடன் நிறைவுசெய்தார். புதிய உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் இன்று (2021.08.09) பதவியேற்றார்.  

உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் அவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களினால் பிரியாவிடை வழங்கி வழியனுப்பும் வைபவம் அவரது பதவிக்காலத்தின் இறுதி தினம் வரைக்கும் நடைபெற்றதானது ஆரோக்கியமானதாகும். இவ்வாறானதொரு சூழல் தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் கடந்தகாலங்களில் இருந்ததில்லை.

அத்துடன் பலகலைக்கழக அபிவிருத்தி என்னும்போது எல்லோரும் கட்டிடங்களை மட்டுமே சுட்டிக்காட்டுவது வழமை. ஏனைய உபவேந்தர்களின் காலங்களில் தேவைக்கு ஏற்ப ஏராளமான கட்டிடங்கள் வெளிநாட்டு உதவிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் பேராசிரியர் நாஜிம் அவர்கள் உபவேந்தராக பதவி வகிப்பதற்கு முன்பு எந்தவொரு பேராசிரியர்களும் உருவாக்கப்பட்டதில்லை. உபவேந்தர் நாஜிம் அவர்கள் தனது பதவிக்காலத்தில் பேராசிரியர்களை உருவாக்கும் நோக்கில் அவர்களது ஆய்வு பணிக்காக முழு கவனம் செலுத்தினார்.

அந்தவகையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுமார் முப்பது (30) பேராசிரியர்கள் உபவேந்தர் நாஜிம் அவர்களது பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்டதானது வரலாற்று சாதனையாகும். இதற்காக பல தடைகளுக்கு மத்தியில் செயல்பட்ட பேராசிரியர் நாஜிம் அவர்களுக்கு எமது சமூகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதுடன், அவரை கௌரவத்துடன் வழியனுப்புவோம்.

அத்துடன் புதிய உபவேந்தரான பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களை அன்புடன் வரவேற்பதோடு பல்கலைக்கழக வளர்சிக்காக அர்பணிப்புடனும், துணிச்சலுடனும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் மூட்டிவிடுதல், கோள் கூறுதல், மற்றவர்களுக்கு ஆப்படித்தல், பிட்டிசன் அடித்தல், வதந்திகளை பரப்புதல் போன்ற வழிகெடுக்கும் கெட்ட செய்தான்களின் தீய செயல்களிலிருந்து பாதுகாப்பு பெறவேண்டுமென்றும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *