பிரதான செய்திகள்

முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில்ஆன்மீக தலைவர்களின் அறிமுக நிகழ்ச்சி

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


இமாம் அபுல் ஹஸன் அஷ் ஷாஸுலி (ரஹ்) அவர்களை அறிமுகம் செய்யும் விதமாக அவர்களின் வரலாறு மற்றும் சிந்தனைகள் உள்ளடங்களான வெபினார் நிகழ்ச்சி திணைக்களத்தினால் (08) ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப.10.00 மணிக்கு ஷரபிய்யாஹ் அரபிக்கல்லூரியின் பணிப்பாளர் கலீபதுல் குலபா அஷ்ஷாஸுலி  மௌலவி ஜெ. அப்துல் ஹமீத் பஹ்ஜியினால் நிகழ்த்தப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார்.

‘ஆன்மீக தலைவர்கள் மற்றும் இமாம்களை அறிமுகம் செய்தல்’ எனும் தலைப்பின் கீழ் சிறந்த  பேச்சாளர்களைக் கொண்டு இந்த தொடர் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.
மேற்படி நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நடைபெற திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மேற்படி சொற்பொழிவுகளை திணைக்கள யூடியூப் (Youtube) மற்றும் முகநூல் (Facebook)  ஊடாக நேரலையாகப் பார்வையிடலாம் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.  

Related posts

20க்கு இருபது உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம்

wpengine

இலங்கை- பாகிஸ்தான் செயலாளராக றிஷாட்

wpengine

எதிர்க்கட்சியின் ஏளனமான எழுகைகள்

wpengine