Breaking
Wed. Apr 17th, 2024

மன்னாரில் சிறு போக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளதால் இடைப் போக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாமென மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்கள் மன்னார் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

பெரும்போக பயிர்ச்செய்கை நிறைவுற்று வரும் இந்த நேரத்தில் மன்னாரில் சிறுபோக பயிற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளதால் விவசாயிகள் இடப்போகம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கடந்த (6)மன்னார் மாவட்ட செயலர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்கள் கேட்டுக்கொண்டார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர் கொள்ளளவு வழமையாக பெரும் போகம் மற்றும் சிறு போக பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு போதுமானதாக இருக்கும் இருக்கும் அதிலும் சிறு போக பயிர்ச்செய்கையின் போது பாரிய அளவு நீர் தட்டுப்பாடுகள் ஏற்படுவது உண்டு

ஆனால் இம்முறை பெரும்போக அறுவடை நிறைவுபெற்ற சில இடங்களில் இடைப் போகம் செய்வதற்காக புலவுக் காணிகளையும் சேர்த்து உழுது தயார் படுத்தி வருவதாக பெருமளவிலான விவசாயிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள்

சிறுபோக பயிற்செய்கை என்பது விவசாயிகளின் விதைநெல் பயன்பாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பதனால் சட்டவிரோதமாக இடை போகம் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக சில விவசாயிகள் கைவிடவேண்டும்

சிறுபோக பயிர்களுக்கு என்று சேமித்து வழங்கப்படும் நீரை இடைப் போகம் செய்பவர்கள் சட்டவிரோதமாக நீரை கொண்டு செல்வதால் சிறுபோக பயிற்செய்கையாளர்கள் மிகவும் பாதிப்படைவார்கள்
இதனால் எங்களுடைய மன்னார் மாவட்டத்தின் விவசாய நிலைமை மேலும் பின்தங்கி போகும் சூழ்நிலை ஏற்படும்

எனவே குழாய்க் கிணறுகள் வைத்திருக்கும் விவசாயிகள் இடப்போக பயிர்ச் செய்கைகள் மேற்கொள்வதை தவிர்த்து உப உணவுப் பயிர்களையும் சிறுதானிய பயிர்களையும் செய்து நன்மை அடையுங்கள் இடைபபோகம் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் விவசாயிகள் கைவிட வேண்டும் என்று மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்கள் கேட்டுக்கொண்டார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *