பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

‘தேவையான நெல் கையிருப்பில் இருப்பதாக அரசு தெரிவிப்பது பொய்’

இம்முறை போகத்தில் நெல் கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கும் கருத்து முற்றிலும் பொய்யானது என அரிசி ஆலை உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் டட்லி சிறிசேன இவ்வாறு கூறினார். 

நாட்டில் தேவையான நெல் உற்பத்தி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

வௌிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளதால் களஞ்சியசாலைகளில் நெல் இருப்பில் இல்லை எனவும், அரிசி விலை அதிகரிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் கூறினார். 

அரிசி விலை எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடும் எனவும், அது நடுத்தர மக்களுக்கு பிரச்சினையாக அமையாது எனவும் அவர்கள் தங்களது அரிசியை உண்பதில்லை எனவும் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். 

நாட்டில் பாதுகாப்பான வியாபாரமாக மக்கள் உட்கொள்ளும் அரிசி காணப்பட்டது. அதனை அழிக்கும் நாள் வரும்போது பார்க்கலாம்.என்னுடைய அரிசி ஆலைகளுக்கு உரிய பணத்தை செலுத்திவிட்டு அரசாங்கம் அதனை என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார். 

Related posts

ராஜபக்ஷ எமக்கு நேரம் ஒதுக்கவில்லை

wpengine

வித்தியா படுகொலை! 13 வயது மாணவன் மயக்கம்

wpengine

கால்நடை உணவை உண்ணும் சிரியா குழந்தைகளின் அவலநிலை

wpengine