Breaking
Sun. Apr 28th, 2024

(ஊடகப்பிரிவு)

புத்தளம் தொகுதியில் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணத்திலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையில் நாம் புத்தளம் மாவட்டத்தின் அனைத்து கட்சிகளினதும், உயர்பீட உறுப்பினர்களையும் அவர்களின் இல்லங்களுக்கும் , அலுவலகங்களுக்கும் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இத்தேர்தலில் கூட்டணியாக களமிறங்குவதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர்.என முன்னால் மாகாண சபை உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா அவர்கள் தெரிவித்தார்.


நேற்று (08) கரம்பை வட்டார இளைஞர் அமைப்பினருடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.


இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,


நாம் மக்கள் மத்தியில் செல்கின்ற போது மக்கள் எங்களிடம் அபிவிருத்திகளை கோரிய காலம் மாறி தற்போது. நீங்கள் அனைவரும் இணைந்தா வருகிறீர்கள் என்ற வினாவை எம்மிடம் தொடுக்கின்றனர். எம்மை இணைந்து வருமாறு எம்மை வலியுறுத்துகின்றனர்.புத்தளத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு மக்களின் கோரிக்கையை ஏற்கவேண்டிய கடமைப்பாடு உள்ளது.

அதே நேரம் இது விடாப்பிடியாக நிற்பதற்கும் பலம்பார்ப்பதற்குமான தேர்தலல்ல, விட்டுக்கொடுத்து பிரதிநித்துவத்தை வென்றெடுப்பதற்கான சூழல் அமைந்துள்ளது.
கடந்த பொதுத்தேர்தலிலே முதன்முதலாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவி ,பின்னர் ஆய்வினை நடத்தி கூட்டமைப்பினால் மாத்திரம் தான் பிரதிநித்துவத்தை பெறமுடியும் என்ற கோற்பாட்டில் கட்சியின் கிளைகளை நிறுவி ,மத்திய குழுவை அமைத்து பாராளுமன்ற தேர்தலுக்கான அடித்தளத்தையிட்டது. இன்று இரு கட்சியின் போராளிகள் கூட ஒன்றிணைந்துள்ளனர் .

ஆனால் இதனை குழப்பியடிக்கும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் பிரிவினையை தோற்றுவிற்கின்றனர்.இந்த சதிகளையும் தகர்த்தெரிவோம்.சதிகாரர்களுக்கு நாம் தகுந்த பாடம் புகட்டுவோம்.என கூறினார் . கொடூர யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வடமாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த மக்கள் தங்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துடனேயே வந்தார்கள், அன்று அபூபக்கர் எம்.பி , அதற்க்கு பிட்பட்ட காலங்களில் மசூர் எம்.பி , ரிஷாட் பதியுதீன் எம்.பி , மஸ்த்தான் எம்.பி என தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து, இன்றும் கௌரவமாக வாழ்கின்றனர்.

இந்த ஒற்றுமையை நாம் படிப்பினையாக கொள்ளவேண்டும். அதே நேரம் தற்போது புத்தளம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண மக்களின் வாக்குகள் எமது வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். தங்களின் முழு ஒத்துழைப்பையும் நழுக வேண்டும். பங்களிப்பீர்கள், புத்தளத்தின் எம் .பி க்கான பங்காளர்களாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.எனவும் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான பயிஸர் மரைக்கார், ஆர்ஷிக் , மற்றும் கல்பிட்டி மத்திய குழுவின் உப தலைவர் தவ்பீக் , கரம்பை வட்டார அமைப்பாளர் தன்வீர் , மற்றும் தஸ்மிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *