பிரதான செய்திகள்

27ஆம் திகதிவரை விடுமுறைக் காலப் பகுதி அல்ல

அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனைகள் உள்ளடங்கிய சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர இந்த விசேட சுற்று நிரூபத்தை அரசாங்க நிறுவன பிரதானிகளுக்காக வெளியிட்டுள்ளார்.


இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் வீடுகளில் இருந்து கொண்டே பணிகளை தொடருமாறு அரசாங்க ஊழியர்களுக்கு ஜனாதிபதி முன்னதாக அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.


வீட்டிலிருந்து கொண்டே சேவையாற்றும் காலப் பகுதியில் திணைக்கள மற்றும் துறை பிரதானிகள் தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் ஊடாக அறிவுறுத்தல்களை வழங்க உள்ளனர்.


இந்த அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயலாற்றுவதற்கு அனைத்து அரசாங்க ஊழியர்களும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்தக் காலப் பகுதி விடுமுறைக் காலப் பகுதி அல்ல எனவும் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இன்றைய தினம் செலுத்துவதற்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

புனானை சந்தியில் விபத்து! கர்ப்பிணி பெண் மரணம்.

wpengine

முஸ்லிம்களுக்கெதிராக இனவாத தாக்குதல்! இரண்டு அரசாங்கங்களும் தவறியிருக்கின்றன

wpengine

தொலைபேசிகள் காணாமற் போனா இணைய தளத்தின் ஊடாக முறைப்பாடு

wpengine