பிரதான செய்திகள்

24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம்

கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​

எனினும், அன்றைய தினம் பிற்பகல் 2 மணியிலிருந்து மீண்டும் குறித்த மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவி தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் மார்ச் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

குறித்த மாவட்டங்களில் பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் 24ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அறிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும், 24 ஆம் திகதி காலை 6 மணியின் பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூடி வைக்க வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற மாவட்டங்களில் விவசாயிகள் தமது பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கு இடமளிக்குமாறு அரசாங்கம் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் போதியளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் அநாவசியமாக பொருட்களை சேகரிப்பது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் என அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச்செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களை தடையின்றி தேவையான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிந்திக்க கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கோத்தா வெற்றிபெறுவார் என்று நான் சொன்னேன்

wpengine

பொலிகண்டி போராட்டம் மூலம் தமிழ் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை

wpengine

யேமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலி!

Editor