பிரதான செய்திகள்

விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை! தனியாக செயற்படுகின்றனர்.

வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதி­ராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்தியமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்­கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்த­தாவது:

தற்காலத்தில் இலங்கையில் பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். எந்தவொரு நாட்டுக்கோ அல்லது நிறுவனத்துக்கோ ஒழுங்கான தலைமைத்துவமொன்று இல்லாதபோது அந்த நாடும் நிறுவனமும் அழிந்து போய்விடும்.
இன்று இலங்கையிலும் அரச தலைவர் மைத்­திரிபால சிறிசேனவுடன் மேலும் பல தலைவர்களும் உள்ளனர்.

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க­வும், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன­வும், மங்கள் சமரவீரவும் நாட்டின் தலைவர்­கள் போலத்தான் இருக்கின்றார்கள்.

மறுமுனையில் வடக்கில் விக்னேஸ்வரன் எதைப் பேசினாலும் அவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. வடக்கு தனியொரு பிராந்திய மாகமாறி­யுள்ளது.

Related posts

கின்னஸில் இடம்பிடித்த தங்கச் சட்டை மனிதர்

wpengine

வெப்ப வெட்டுவான் பிரதேசம் கொம்பர் சேனை பண்டாரக் கட்டு பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்றிந்தார் ஷிப்லி

wpengine

ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கை பொலிஸ் மா அதிபர்

wpengine