Breaking
Tue. May 7th, 2024

(ஏ.எம்.றிசாத்)

1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு புத்தளம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அகதிகளாக அடைக்களம் தேடி வந்த வரலாறு அனைவரும் அறிந்ததே.

பாசிசப்புலிகளுடனான யுத்தம் முடிந்த பின்னர் அகதிகளாக வந்த மக்கள் மீண்டும் தமது செந்த இடங்களில் தமது பூர்வீக மண்ணில் குடியேற விரும்பினர்.அந்த  நிலையில் தான் முசலிப்பிரதேச மக்களும் செந்த இடத்தை நோக்கிய  மீள் குடியேற்ற பயணத்தை ஆரம்பித்தனர்.

முசலிப்பிரதேச மக்களின் மீள் குடியேற்ற பல சவால் நிறைந்த தாகவே காணப்பட்டது. அங்கு குடியேற அவல் கொண்டவர்களாக அமைச்சர் றிஷாட் பதியுதீனை நாடிச்சென்றனர் அவர் மூலம் தான் தமது தாயக பூமியான முசலி மண்ணில் மீள் குடியேறி வாழ முடிவோடு அவரின் உதவியை எதிர்பார்த்தனர்.அமைச்சர் றிஷாட் பதியுதீன் இவர்களுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தார்.

செந்த இடத்தினை துப்பரவு செய்தல்!!

மக்கள் வாழ்ந்த இடங்கள் காடுகளாக காணப்பட்டது அதனை முதலில் துப்பரவு செய்வதனை ஆரம்பித்தார் இதன் மூலம் காடாக காட்சி தந்த முசலிப்பிரதேசம் மக்கள் வாழ்ந்த மண்ணாக மாற்றியமைக்கப்பட்டது.காடுகளை துப்பரவு செய்ய அமைச்சர் றிஷாட் பதியுதீன் உதவியதால் தான் இன்றும் இனவாத காவிகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்  காடுகளை அளித்தார்  என்று அவர் மீது குற்றத்தை சுமத்துகின்றனர்.

ஊர்களுக்கு செல்லும் பாதைகள் புனரமைப்பு!!

முசலிப்பிரதேசத்துக்கு செல்லும் பாதைகளை புனரமைத்தார். அந்த மக்களின் போக்குவரத்துக்கு கஸ்டம் வந்து விடமல் அங்கு மீள் குடியேறிய மக்கள் சென்றுவர பாதைகள் அவசியம் அதனையும் அமைச்சர்  செய்து கொடுத்தார்.

முசலிப்பிரதேசத்தில் மின்சாரம்!

1990ம் ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லை 2000ம் ஆண்டுகளிம் மின்சாராம் இல்லாத பிரதேசமாக இருந்த முசலிப்பிரதேசத்தில் இன்றும் முசலிப்பிரதேசத்தில் இருக்கும் அத்தனை வீதிகளுக்கும் மின்சாரம் இருக்கின்றது இதை யார் செய்தது. திட்டமிட்ட ஒரு முறை இல்லாத மீள் குடியேற்றம் என்றால் இது சாத்தியப்படுமா.

வீட்டுத்திட்ட உதவிகள்!!

முசலி மண்ணில்  மக்கள் சென்று வாழவேண்டும் அதற்காக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் கஸ்ட நிலையை உணர்ந்து தட்காளிக இருப்பிடங்களை கொட்டில்களை அமைத்துக்கொடுக்தார்.அதன் பின்பு நிரந்தர வீட்டுதிட்டவசதிகளை செய்துகொடுத்தார்.அன்று அவ்வாறு செய்ய வில்லை என்றால் இன்றும் முசலிப்பிரதேசத்தில் மக்கள் வாழ செல்லாமல் தான் இருந்திருப்பார்கள்.

புதிய கிராம உருவாக்கம்!!!

இடம்பெயர்ந்த போது இருந்த மக்கள் தொகையை விடவும் அதிகமான குடும்பங்கள் காணப்பட்ட்தால் புதிய கிராமத்தின் தேவை காணப்பட்டது அதன் அடிப்படையில் மக்களுக்கான புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டது. அளக்கட்டிலும்-காயாக்குளியிலும்-வெள்ளிமலையிலும்-கொண்டச்சியிலும்-மறிச்சிக்கட்டியிலும்  அந்த இடங்களில் காணப்பட்ட அரச காண்களின் அளவிற்கு ஏற்ப பிரித்து மக்களுக்கு வழங்கி புதிய குடியேற்ற திட்டத்தினை ஆரம்பித்தார் அமைச்சர் றிஷாட் பதியுதீன் .இந்த புதிய கிராமங்களின் வருகையின் பின்புதான் இனவாத காவிகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் முசலிப்பிரதேசத்தில் புதிய முஸ்லிம் பிரதேசத்தை வெளிநாடுகளில் இருந்து மக்களை கொண்டுவந்து குடியேற்ற முயற்ச்சிக்குறார் என்ற அபாண்டத்தை அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது சுமத்த ஆரம்பித்தனர்.

குளங்கள் புனரமைப்பு!!

மீள்குடியேறிய முசலிப்பிரதேச மக்களில் அதகமானேர் விவசாயத்தை தமது வாழ்வாதார தொழிலாக கொண்டவர்கள் அவர்கள் அங்கு வாழ்வதற்கு தொழில் அவசியம் அதனால் விவசாயத்தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டும் நீர் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக முசலிப்பிராதேசத்தில் காணப்பட்ட குளங்களை புனரமைத்துக் கொடுத்தார் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

கல்விக்காண உதவிகள்!!!

திட்டமிட்ட அசிப்படையில் பாடசாலைகளை உருவாக்கினார் புதிய கட்டிடங்களை  அமைத்துக்கொடுத்தார். முசலிப்பிரதேச மாணவர்களின் கல்வி வழர்ச்சியை அதிகமாக்க பல திட்டங்களை ஆரம்பித்தார்(பகுதிநேர வகுப்புகளுக்கு நிதி உதவி செய்தார்)  15க்கு அதிகமான பாலர் பாடசாலை கட்டிங்களை அமைத்துக்கொடுத்தார் அதேபோல் தூர இடங்களுகு கல்விக்காக செல்ல விடமல் ஆரப பாடசாலைகளை அமைத்துக்கொடுத்தார்.மன்னார் மாவட்ட்த்தின் முதலாவது ஸாஹிரா பாடசாலையை முசலியில் உருவாக்கினார்.அமைச்சர் றிஷாட் பதியுதீன்.இப்படி பல கல்லிக்கான உத்விகளை செய்தார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் முயற்சியின் மூலம் முசலிப்பிரதேசத்தில் முசலிப்பிரதேச செயலக  கட்டிடத்தை புனரமைத்துக்கொடுத்தார்.பிரதேசபைக்கட்டிடத்தை அமைத்துக்கொடுத்தார்.வைத்தியசாலை வசதிகளை செய்து கொடுத்தார். இப்படி பல திட்டங்களை செய்துகொடுத்தார் இன்னும் அமைச்சர் செய்துகொண்டு இருக்கிறார்.

இதனால் முசலிப்பிரதேச மக்கள் அமைச்சரோடும் அவர் சார்ந்த கட்சியோடும் இணைந்து இருக்கிறார்கள். முசலிப்பிரதேச மக்களை அமைச்சரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதேச வாத சிந்தனைகொண்டோர் அமைச்சர் எதையும் செய்ய வில்லை என்ற அபாண்டத்தை பேசியும் எழுதியும் வருவதை அவதானிக்க முடிகிறது.இவ்வாராணவர்களை மக்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களின் நோக்கம் அமைச்சரை விமர்சிப்பதே தவிர  செயலில் எதையும் செய்யமாட்டார்கள் என்று.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *