பிரதான செய்திகள்

விக்கியின் விசாரணை குழுவில் மோசடி,சிறைவாசம்

முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் இருந்த நால்வரில் ஒருவர் மோசடிகளுக்காக சிறைவாசம் அனுபவித்தவர் என வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் குழப்பத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழுவினர் குறித்து அவருக்கே சரியாக தெரியாது.

ஒருவர் சிறைவாசம் அனுபவித்தவர், மற்றுமொருவர் யாழில் முஸ்லிம் மக்களின் காணிகளை போலி கையொப்பமிட்டு விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

முதலமைச்சர் எங்களிடம் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கூறவில்லை, பதவிகளை தியாகம் செய்யுங்கள் என்று கூறியிந்தார்.

ஒரு அமைச்சராக இருந்து சமூக சேவைகளை செய்யும் போதுதான் பிரச்சினைகள் வரும். இனி நான் ஒரு பொதுமகனாக இருந்து எனது பணிகளை செய்வேன்” என குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சிறுபோகத்திற்கு தேவையான 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்.

wpengine

மன்னார்,பெற்கேணி சிறுவனின் மரணம் (Update)

wpengine

உதய கம்மன்பிலவை சந்தித்த ஞானசார

wpengine