பிரதான செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி!

வவுனியா சிறைச்சாலையில் தட்டம்மை தடுப்பூசி பெறாத அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைக்குள் அம்மை நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் நான்கு கைதிகளுக்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து ஜூலை 25 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

கைதிகள் உறவினர்களை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை சந்திக்கும் வாய்ப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கைதிகளை சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முல்லைத்தீவு பகுதியில் முறுகல் நிலை! மக்கள் போராட்டம்

wpengine

முகக்கவசம் இல்லாதவர்களுக்கு வவுனியாவில் தண்டப்பம்

wpengine

வட மாகாண அமைச்சர்களுக்கு மோதப்போகும் விக்னேஸ்வரன்

wpengine