Breaking
Fri. Apr 26th, 2024

செல்பி எடுக்கும் ஆர்வக் கோளாறில் 126 ஆண்டு சிலையை உடைத்த போர்ச்சுக்கல் இளைஞர்,
“செல்பி எடுக்கிறேன்” என ஆபத்து நிறைந்த இடங்களில் போஸ் கொடுத்து உயிரை விட்ட பலரின் செய்திகளை நாம் அறிவோம்.

ஆனால், போர்ச்சுக்கல் நாட்டில்,  ஒரு இளைஞர் செல்பி எடுக்கும் ஆர்வத்தில், 126 ஆண்டு பழமை வாய்ந்த 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசனின் சிலையை உடைத்துள்ளார். உடைத்துவிட்டு கமுக்கமாக அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆன அந்த இளைஞரை, காவல் துறையினர் மடக்கிப் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள ரோசியோ ரயில் நிலையத்தில் உள்ளது 16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த டாம் செபாஸ்டியாவோ எனும் அரசனின் சிலை. இந்த சிலையுடன் நின்று செல்பி எடுக்க முயன்ற அந்த இளைஞர், சிலையின் பீடத்தில் நின்று, தனது செல்போனை உயர்த்தியுள்ளார். அவ்வளவுதான், 126 ஆண்டு பழமை வாய்ந்த சிலை, சில நொடிகளில் உடைந்து கீழே விழுந்தது.

1557 முதல் 1578 வரை போர்ச்சுக்கல் நாட்டை ஆண்ட டாம் செபாஸ்டியாவோ, தனது மூன்று வயதில் அரசர் பதவியை வகித்தார். 1578 ம் ஆண்டு நடந்த போரில்,  24 வயதான செபாஸ்டியாவோ இறந்து போனார். அவர் நினைவாக, 1890 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சிலை, உடையும் வரை நல்ல நிலையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *