Breaking
Wed. May 1st, 2024

பாராளுமன்ற உள்ளகப் பிரிவிலுள்ள பெண் ஊழியர்களுக்கு ஒருசில பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்படும் தொல்லை அல்லது அச்சுறுத்தல் தொடர்பில் அந்த அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நட வடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற மகளிர் உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீரவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை சாதாரணமானவொரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருசில பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகளினால் நீண்டகாலமாக தமக்கு, பல்வேறு அச்சுறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும் இதுபோன்ற செயற்பாடுகளுக்கு முடிவு காணப்படாததால் தாம் பல்வேறு பழிவாங்கல்களுக்கு உள்ளாவதாகவும் பாதிப்புக்குள்ளான பெண் பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பில் செயற்பட்டு தமக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரும் அந்த பணியாளர்கள், விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தினால் இதுதொடர்பான சகல தகவல்களையும் இரகசியமாக பெற்றுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒருசில பணியாளர்கள் தமது தொழில் இல்லாமல் போய்விடும் என்ற பயத்தில், இதுதொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு கூட அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினை குறித்து எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

A B

By A B

Related Post