பிரதான செய்திகள்

அமைச்சர் றிசாத்தை மக்கள் சேவகனாக நாங்கள் பார்க்கின்றோம்! உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்

குச்சவெளி,  தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (27/03/2016) இரவு இணைந்துகொண்டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள், இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் பாடுபடப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர்.0a4eae27-4d9d-45e9-8c92-a7a099315070

கிண்ணியா, பொது மைதானத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டம் நடைபெற்ற போதே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த காலங்களில் தாம் அங்கம் வகித்த கட்சிகளால் மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை எனவும், அமைச்சர் றிசாத்தை ஒரு செயல்திறன் உள்ள, துடிப்பு வாய்ந்த மக்கள் சேவகனாக தாம் இனங்கண்டதனாலேயே, இந்த முடிவை அறிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.4361474e-832b-448d-8b5f-d96f82e350a7

மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டவர்களுள், சிங்கள சகோதரர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.12140781_513589835479699_5933759222978781573_n

Related posts

பாவனையாளர் அதிகார சபையில் 62 பேருக்கு அமைச்சர் றிஷாட் நியமனம்.

wpengine

வாக்குச்சீட்டு அச்சடித்த ஊழியர்களுக்குறிய ரூபா 4 கோடி கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை!

Editor

முன்னால் அமைச்சர் றிஷாட் தொடர்பில் பசிலுக்கும் சுமந்திரன் எம்.பிக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம்

wpengine