பிரதான செய்திகள்

முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் செல்லும் வீதிகளில் யானை

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் செல்லும் வீதிகளில் இரவு வேளைகளில் யானை அச்சுறுத்துவதாக பொது மக்களும் பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் செல்லும் வீதியில் நடுவே நின்றிருந்த யானையால் வாகனத்தில் பயணித்த பயணிகள் பதற்ற நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு இரவு வேளைகளில் வாகனங்களில் செல்லும்போது யானையினால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக பொது மக்கள் தெரிவத்துள்ளனர்.

இரவு வேளைகளில் பிரதான வீதிகளில் யானைகளின் நடமாட்டத்தால் வாகனங்கள் பயணிப்பதில் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் இப்பகுதிகளில் அண்மைய காலங்களில் அதிகளவான யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

வேறு பகுதிகளிலிருந்து இப்பகுதிக்கு யானைகளை எடுத்து வந்து விட்டுள்ளதாக அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு வேளைகளில் நெடுங்கேணியில் இருந்து முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளினூடாக பயணங்களை மேற்கொள்ளும் போது இவ்வாறு யானைகளின் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.

இதனைக்கட்டுப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வேண்டும் எனவும் வாகனச்சாரதிகள் கோரியுள்ளனர்.

Related posts

சிறுவர்கள் கவனம்! வன்னியில் மூவருக்கு பன்றிக்காச்சல்

wpengine

IMF ன் உதவியை கொண்டாவது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்!-நுவரெலியாவில் ஜனாதிபதி-

Editor

இணைக்குழு தலைவர்கள் முடிவுகளை எடுக்கவில்லை என்றால் மக்களுக்கு தான் பாதிப்பு! அமைச்சர் றிஷாட்

wpengine