Breaking
Thu. May 2nd, 2024

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கையின் மிக முக்கிய பழைமை வாய்ந்த மாவட்டங்களில்; ஒன்றும் தற்போதய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வசித்துவரும் மாவட்டமுமான பொலன்னறுவை மாவட்டத்தின் பொலன்னறுவை நகரத்தில் குரங்குகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும்  இதனால் பொலன்னறுவைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச,அதிகாரிகள் அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் குறிப்பாக பொலன்னறுவை கல்விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள வளைவில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கும் இடத்தில் அதிகமாக காணப்படுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குரங்குகளின் அட்டகாசம் காரணமாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஏ.எம்.சப்ரி கருத்து தெரிவிக்கையில்.cc4d3589-cc45-4c03-928f-bd9ee0022f1a

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற எங்களுடைய குடும்பம் பொலன்னறுவை கல் விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள வளைவில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொன்டிருந்த போது அங்கு நடமாடித்திரிந்த குரங்குகள்  எதிர்பாராத விதமாய் வாகனத்தின் யன்னலினூடாக உட்புகுந்து அங்கிருந்த பெறுமதிமிக்க அப்பில் கையடக்க தொலைபேசி, பணம், சாரதி அனுமதிப் பத்திரம், காப்புறுதி அடங்கிய பையை எடுத்துக்கொன்டு மின்னல் வேகத்தில் அடர்ந்த காட்டினுள் ஓடிவிட்டதாகவும் ,அதன் பின்னர் அந்தக் குரங்கு திரும்பி வரவில்லையெனவும் இது போன்ற சம்பவம் அடிக்கடி இங்கு வருபவர்களுக்கு நேரிடுவதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *