Breaking
Mon. May 6th, 2024
டி20 உலகக்கண்ண போட்டியில் 2வது முறையாக மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

டி20 உலகக்கிண்ண போட்டியில் இறுதி ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

துவக்க ஆட்டகாரர்களாக ஜேசன் ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினார்கள். கடந்த ஆட்டத்தில் அசத்திய ஜேசன் ராய் பத்திரி பந்தில் ஸ்டேம்பை பறிக்கொடுத்தார். அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான ஹெல்ஸ் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணி அதிர்ச்சியடைந்தது.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் மோர்கன் பத்திரி பந்தில் கேட்ச் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி கடும் பின்னடைவுக்கு உள்ளானது.

இதனை அடுத்து இங்கிலாந்தின் நச்சத்திர வீரர் ஜோ ரூட்டும், ஜோஸ் பட்லரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சுலைமான் பென் வீசிய ஓவரில் பட்லர் இரண்டு சிக்ஸ் அடித்து ஓட்ட விகித்ததை கூட்டினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பட்லர் 34 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிராத்வெய்ட் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதனால் அணியை காப்பாற்ற வேண்டிய முழு பொறுப்பும் ஜோ ரூட் மீது விழுந்தது. ஆனால் மோசமான ஒரு ஷாட்டை விளையாடி 54 ஓட்டங்களில் ஜோ ரூட் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகப்பட்சமாக ரூட் 54 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் பிராவோ, பிராத்வெயிட் ஆகியோர் 3 விக்கெட்களும், பத்திரி 2 விக்கெட்டும் விழ்த்தினார்கள்.

156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

மேற்கு இந்திய தீவுகள் அணி 161 ஓட்டங்களை  குவித்தது. இதன்மூலம் 2வது முறையாக உலகக்கிண்ணத்தை வென்று மேற்கு இந்திய தீவுகள் அணி அசத்தியுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *