Breaking
Fri. Apr 26th, 2024

ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் 2 மாதங்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்து உள்ளது. மெகபூபா ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா கட்சியும் தனது ஆதரவை தெரிவித்தது. நாளை (4-ம் தேதி) புதிய அரசு பதவியேற்கிறது. பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முதல்-மந்திரியாக பதவியேற்ற பின்னர் பாரதிய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியினர்  ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா கூறியுள்ளார். ”ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா –  மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் இருகட்சியை சேர்ந்த உறுப்பினர்களும்  ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கமிடுவார்கள் என்பதை பார்க்க எதிர்நோக்கி உள்ளேன்,” என்று டுவிட்டரில் உமர் அப்துல்லா குறிப்பிட்டு உள்ளார்.

மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட முடியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியநிலையில் அதற்கு பதில் அளித்துள்ள உமர் அப்துல்லா இக்கருத்தை பதிவுசெய்து உள்ளார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *