Breaking
Sat. May 4th, 2024

(ஆக்கம் இலவசக்கல்வியை பாதுகாக்க எம்மிலிருந்து ஒருவன்)

கடந்த ஆட்சியில் சால்வைக்காரர்களதும், காவியுடை தரித்தவர்களினதும் செல்லப்பிள்ளையாகவிருந்து முஸ்லிம்களின் வெறுப்பை சம்பாதித்து, கடந்த தேர்தலில் படுதோல்வியடைந்து, பெரும்மான்மை இனத்தவரால் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் எனும் எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு உலாவும் குறித்த நபர் ; தற்போது நாட்டிலுள்ள திறமை அடிப்படையில் சித்தியெய்து பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தில் மண் அள்ளிப்போட தயாராகி உள்ளார்.

அதாவது; உலமா கல்லூரி எனப்படும் மட்டக்களப்பு கெம்பஸில் புதிதாக மருத்துவபீடத்தை நிறுவுதற்கு முயற்சிக்கிராரம்.

பொதுமக்களில் பலருக்கு இது விடயத்தில் உள்ள தெளிவின்மையை களைவதற்கும் பணத்துக்கு விலை போன சில அரசியல்வாதிகள் மற்றும் கல்வி கற்று பட்டம் பல பெற்றும் முட்டாள்களாய் நடந்து கொள்ளும் அறிவீனர்கள் இது பற்றி கூறும் கருத்துக்களில் உள்ள பொய்களை அம்பலப்படுத்தும் வண்ணமும் இக்கட்டுரை வரையப்படுகின்றது.

அரச பல்கலைக்கழகங்களின் வளங்களை சூறையாடி இலவச கல்வியை முறையை செயலிழக்கச்செய்து அவற்றிற்கு மாற்றீடாக தனியார் பல்கலைக்கழகங்களை மக்கள் முன் அறிமுகப்படுத்தி பணம் சம்பாதிக்கும் முறை இன்று நேற்று அல்ல சுமார் 30 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

இதற்கெதிராக மாணவர்கள் ஆட்ஷேபனை தெரிவித்த போதெல்லாம் அவர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டன.2471afdf-5a42-4774-88ff-c59eae1aa09f

அதிகாரத்திலிருந்தோர் பணத்துக்கு அடிமையாகி அதர்மத்தின் பக்கம் தலைசாய்த்தனர்.

விளைவு…???

தனியார் பல்கலைக்கழங்கள் ஆங்காங்கே தலைதூக்க தொடங்கின. அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் பணம் கொடுத்து வாங்கப்பட்டனர். அரச பல்கலைக்கழகங்களின் கல்வி கற்கும் மாணவர்களின் நிலை அந்தோ பரிதாபமானது. கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இலவசக்கல்வி முறை பாதிக்கப்படுவதனை எதிர்த்து மாணவர்கள் போராடத்தொடங்கினர்.

இதனை சகிக்க முடியாத அதிகாரத்திலிருந்தோரால் மாணவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.இற்றை வரை இதற்காக போராடிய மாணவர் ஒன்றியத்தின் தலைவர்களில் சுமார் 10 பேர் வரிசையாக கடத்தப்பட்டு மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன்தொடராகவே கடந்த 2010 ஆம் ஆண்டு  மாலபே எனும் இடத்தில் SAITM எனும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

இதன் விளைவுகள்.

1. இதுவரை காலமும் மாவட்டத்தில் அதிகூடிய சித்திகளைப்பெற்று  திறமை அடிப்படையில் வடிகட்டப்பட்டு மருத்துவ துறை கற்பதற்கு தெரிவாகின்றனர்.
இதற்காக ஆகக்குறைந்தது A 2 B அல்லது  2AB பெற்றிருக்க வேண்டிய நிலைமையில் வெறுனே 3 S களை பெற்ற ஒருவரால் பணம் இருந்தால் மருத்துவம் கற்கும் நிலை தோன்றியுள்ளது.

2. இதன் காரணமாக தரமற்ற வைத்திய சமுதாயம்,நம்பகத்தன்மை குறைந்த சுகாதாரத்துறை உருவாகும் ஆபத்து உள்ளது.

3. இலங்கை அல்லாத வேறுநாடுகளில் மருத்துவம் பயிலும் ஒருவர் இலங்கையில் தொழில் புரிய வேண்டுமாயின் அரச மருத்துல சங்கத்தினால் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தி அடைய வேண்டும்.

ஆனால் மாலபே தனியார் கல்லூரி மாணவர்கள் இவ்வாறான பரீட்சை எழுதாமலேயே நேரடியாக தொழில் புரிய முடியும் என்பதனால் இவர்களது திறமையின்மை மூடி மறைக்கப்பட்டு மற்றும் நம்பகத்தன்மையற்ற வைத்தியம் மக்களை அடைய வழிகோலும்.

4. இவர்களுக்கென்று தனியான போதனா வைத்தியசாலை கட்டிகொடுக்கப்பட்ட போதிலும் தமது மருத்துவ பயிற்சியினை (clinical practice ) கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஹோமாகம,மஹரகம,அவிஸ்ஸாவலை, ஜெயவர்தனபுர,நாரஹேன்பிட்டிய ஆகிய அரச வைத்தியசாலைகளில் தொடர அனுமதி கேட்டு வழக்குதாக்கல் செய்திருப்பதனால் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு களனி,கொழும்பு,ஜெயவர்தனபுர பல்கலைக்கழங்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

5. பொதுவாக ஒரு மருத்துவ மாணவனுக்கு/வைத்தியருக்கு மிக அவசியமான பாடங்களான anatomy , physiology , biochemistry ஆகிய மூன்று பாடங்களும் முழுமையாக இரண்டு வருடங்கள் அக்குவேரு ஆணிவேராக கற்பிக்கப்படும்.ஆனால் இத்தனியார் கல்லூரியில் வெறும் ஆறே மாதங்கள் நுனிப்புல் மேய்வது போல் கற்பிக்கப்படுகிறது.
இதிலிருந்து இக் கல்லூரியிலிருந்து வெளியாகும் மாணவனின் தகைமை பற்றி பாமர மகனால் கூட கூறிவிடமுடியும்.

6. ஒவ்வொரு வருடமும் அரச பல்கலைக்கழகங்களிலிருநது சுமார் 1000 மருத்துவ பட்டதாரிகள் வெளியாகி மருத்துவ தொழில்பயிற்சியினை
(Internship) மேற்கொள்ளும் நிலையில் அவ்வெண்ணிக்கையினை 600 ஆக குறைத்து  தனியார் கல்லூரி மாணவர்கள் 400 களை திட்டமிட்டிருப்பதாக தெரியவருகினறது. இதன் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு கல்வி பயிலும் அரச மருத்துவ மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இவ்வாறாக அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர்களின் வளங்களை சூறையாடி திறமை குன்றிய , நம்பகத்தன்மை அற்ற சுகாதாரத்தை வழங்கும் வழங்கும் வைத்தியர்களை உருவாக்கும் பொறிமுறையை வழங்குவதற்கான அடுத்த கட்ட முயற்சியில் மேற்குறித்த அமைச்சர் ஈடுபட்டுள்ளமை மிக வன்மையாக கண்டிக்கப்படத்தக்கது.

முன்னைய செய்தியுடன் தொடர்புடைய செய்தி 

<internetfriend14@gmail.com>

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *