Breaking
Thu. May 9th, 2024

(அஷ்ரப் ஏ.சமத்) 

 முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மறைந்து 21 வருடங்களின் பின்  அவா் நாடு முழுவதிலும் ஆரம்பித்து வைத்த  உதா கம்மான (கிராம எழுச்சி) மீண்டும் நாடு முழுவதும்  நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது அதில்  முதலாவது உதா கம்மான கிராமம் முல்லைத்தீவு  வெலிஓயா பிரதேச செயலாளா் பிரிவில் சம்பத் நுவர ”இசுருபுர எனும்  கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் பணிப்புரையின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இவ் வீடமைப்புக் கிராமததினை நிர்மாணித்துள்ளது. இக் கிராமம் 25 வீடுகள் கொண்டது. இதில் வீடுகளை நிர்மாணிக்க வென  முல்லைத்தீவு வீடமைப்பு மாவட்டக் காரியலயம் ஊடாக 2 இலட்சத்து 50ஆயிரம் ருபாவை வீடமைப்புக் கடனாக வழங்கியுள்ளது.
அத்துடன் காணி, பாதை நீர் சமுக சேவைகள் மண்டபம்  போன்ற அடிப்படை வசதிகளும் இங்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 50f21b33-fa49-4c8a-80a7-f488df94347e
இவ் வைபவத்தில் வீடமைப்பு பிரதியமைச்சா் இந்திக்க பண்டார அமைச்சின் செயலாளா் தேசிய வீடமைப்பு  அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் சாகர பலன்சூரிய மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
3efe5ec3-9bb5-4176-8121-785bb0b9c052
அமைச்சா் சஜித் பிரேமதாசா கம் உதாவ வீடமைப்பு பற்றி உரையாற்றுகையில் இந்த நாட்டில் வீடமைப்பு புரட்சியை ஏற்படுத்திய எனது தந்தை ஆர் .பிரேமதாசாவின் என்னக் கருக்கள் கொண்ட வீடமைப்புத் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.  ஏற்கனவே எனது நடவடிக்கையின் பேரில் – இளைஞா் வீடமைப்பு, ஊடக வீடமைப்பு, வன வள யானைகளினால் அழிவுரும் மக்களுக்கான வீடமைப்பு, அரச சேவையாளா்களுக்கான வீடமைப்புக் கிராமங்களை என உதான கம்மான  25 மாவட்டங்களிலும் செயல் படுத்தப்பட்டு வருகின்றது.a3962435-ac91-4be8-95cb-92f38c85c295
இதுவரை  ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும் 200 உதா கம்மான நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ் வீடமைப்புக்களுக்காக தேசிய வீடமைப்பு  அபிவிருத்தி அதிகார சபை 10  போ்ச் காணிகளை இலவசமாக  வழங்கி வீடமைப்புக் கடன்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *