Breaking
Fri. May 17th, 2024

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக சிற்றுண்டிச்சாலை இயங்காத காரணத்தால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வைத்தியசாலை விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் உட்பட அனைவரும் உணவை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி தாய்மார்கள், வயோதிபர்கள் என அனைவரும் ‘சுடு நீரை’ பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, சிற்றுண்டிச்சாலையூடாக பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வட மாகாண சபையினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவகத்திற்கு வைத்தியசாலை வளாகத்தினூடாக செல்ல கடமையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அனுமதிப்பதில்லை.

இதனால் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயினுடாக வெளியில் சென்றே தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் ‘சுடு நீரை’ பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனியை தொடர்பு கொண்டு வினவிய போது,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில், ஏற்கனவே காணப்பட்ட சிற்றுண்டிச்சாலையின் கட்டடம் முழுமையாக அகற்றப்படும் நிலையில் உள்ளது.

வைத்தியசாலையுடன் எவ்வித ஒப்பந்தமும் செய்யாது வைத்தியசாலை வளாகத்தில் உள்ள அம்மாச்சி உணவகம் இயங்கி கொண்டிருக்கின்றது.
குறித்த அம்மாச்சி உணவகம் காணப்படும் கட்டடத்தை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

E
ஒரு மாதத்தினுள் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *