Breaking
Sat. May 18th, 2024

ஊடகப்பிரிவு 

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும்அண்மையில் இடம்பெற்ற ஜனநாயகவிரோத செயற்பாட்டை முறியடித்துஅரசாங்கத்தை தக்கவைக்கச்செய்ததிலும் அகில இலங்கைமக்கள் காங்கிரசின் வகிபாகத்தைஎவரும் எளிதாக மறந்து செயற்படமுடியாதென்று அக்கட்சியின் தலைவர்அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார்.

வவுனியா அரபா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லவிளையாட்டு போட்டி மற்றும் புதியகட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும்நிகழ்வில் பிரதம அதிதியாக அவர்  (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதுமேலும் கூறியதாவது,

மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதிதேர்தலில் 2015 ஆம் ஆண்டில் குதித்தபோது ,  மூடியிருந்த கதவை நாங்கள்திறந்து விட்டதானாலேயே அவருக்குஆதரவு பெருகி,  வெற்றி பெற்றார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியா? மஹிந்தவா? என்று பெரிய பிரளயம்கிளம்பியிருந்த போது நாம் என்னமுடிவை எடுக்கப்போகின்றோம் எனஎல்லோரும் அப்போதுஎதிர்பார்த்திருந்தனர். “நாம் போகமாட்டோம்” என அடித்துகூறியவர்களுக்கு நாம் எடுத்ததீர்க்கமான முடிவு மரண அடியாகமாறியது.

 அதே போன்று ஜனாதிபதி மைத்திரிஅண்மையில் மேற்கொண்ட  ஜனநாயகவிரோத செயற்பாடுகளின் போதும்,  நாம் அவருக்கு ஆதரவளிப்போமெனபலர் எண்ணினர் . எனினும்ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காகநாம் எடுத்த முடிவு அவரது முயற்சிகளைபாழாக்கியது.

ஜனாதிபதி தேர்தலின் போது “நாம்வந்ததனாலேயே அவர் வெற்றிபெற்றார்”. இப்போது “நாம்  வராததனாலேயே அவரது முயற்சிகள்தோல்வியுற்றன”. இதனை முன்னாள்ஜனாதிபதி மஹிந்தவுக்கும் உணர்த்திஇருக்கின்றோம். கோடிகளுக்கும்பதவிகளுக்கும் விலை பேசப்பட்டபோதும் நாம் எதற்கும் அசைந்துகொடுக்க வில்லை .

தற்போதைய அரசியல் சூழல்இடியப்பச்சிக்கலாகவும் , கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்தபிரதமர் யார் ?  எவரது கையில் இனிவரும் ஆட்சி? என்று தீர்மானிக்கும்காலம் நெருங்கி வருகின்றது.

கடந்த காலங்களில் வன்னியில் உதித்தஎமது கட்சியானது  ஆட்சியைதீர்மானிக்கும் பிரதான கட்சிகளில்ஒன்றாக இருந்தது. அதே போன்று இனிவரும் காலங்களிலும் இந்த கட்சியின்பங்களிப்பு அவர்களுக்கு அவசியமே.

வன்னியிலுள்ள தமிழ் பேசும் மக்கள்ஒற்றுமையுடனும் புத்திசாதூரியத்துடனும் செயற்பட்டால் கடந்தகாலங்களை போன்று  சவால்களைமுறியடித்து , ஆட்சியில்  தவிர்க்கமுடியாத, முக்கிய ஒரு கட்சியாகபரிணமித்தது போல, இனி வரும்காலங்களிலும் அதனை விளங்க செய்யமுடியும். அதன் மூலம் நாம் சொல்வதைசெய்ய கூடிய நாட்டுத்தலைமையைஉருவாக்க முடியும். எல்லா இனத்தையும்மதத்தையும் சமமாக மதித்துபோஷிக்கும் ஒரு ஜனாதிபதியையும்  உருவாக்கலாம்.

எமது செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக இருக்க கூடாது. தூரஇலக்குடன் செயற்பட வேண்டும். இனங்களுக்கிடையிலும் , மதங்களுக்கிடையிலும் ஐக்கியத்தைசிதைத்து எங்களை பிரித்து வேறாக்கநினைப்பவர்களுக்கு நமதுஒற்றுமையின் மூலம் சிறந்த பதில்களைவழங்குவோம் . இவ்வாறு அமைச்சர்தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *