பிரதான செய்திகள்

மன்னார் நகர சபையின் முன்னால் தலைவர் ஞானப்பிரகாசம் மாரடைப்பால் மரணம்

(றொஸ்டேரீயன் லேம்பட்)

மன்னார் நகர சபையின் முன்னால் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்(வயது-67) திடீர் மாரடைப்பின் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

திடீர் சுகயீனம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலை 5.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் நகர சபைத்தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளைப்பெற்று மன்னார் நகரசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது

wpengine

இஸ்லாத்தைத் தழுவிய சுஷ்மா சுவராஜ்

wpengine

இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை

wpengine