Breaking
Mon. May 6th, 2024

(என்.எஸ்.ஏ.கதிர்)

பாலஸ்தீனின் இதயப்பகுதியான ஜெரூசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் (அல் அக்ஸா) பள்ளிவாசல் இடம் தங்களுக்கு தான் முழு உரிமையும் உள்ளது என்று யூதர்கள் பல ஆண்டுகாலமாக கூறிவருகின்றனர்.

மத கோட்பாடுகளின் அடிப்படையில் தங்களின் கருத்தை உண்மையாக்கும் விதத்தில் அல்குத்ஸ் மற்றும் மேற்கு சுவர் அமைந்துள்ள இந்த பகுதியை டெம்பில் மவுண்டன் என்று அழைத்து வருகின்றனர்.மேலும் அந்த பகுதியை ஆராய்ச்சி என்ற பெயரில் பல அடி ஆழத்துக்கு தோண்டி எடுத்து தங்களின் கருத்தை உண்மையாக்க தங்களுக்கு சாதகமான ஆதாரங்களை தேடி வருகின்றனர்.ஆனால் இன்றுவரை யூதர்களுக்கு சாதகமான ஆதாரங்கள் கிடைப்பதாக இல்லை. மாறாக அல்குத்ஸ் பள்ளிவாசல் இதகைய்ய செயல்பாடுகளால் தந்து பலத்தை இழந்து வருகிறது.

இஸ்ரேலின் செயலால் அல் குத்ஸின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உடைந்துவிடும் அபாயம் இருப்பதாக பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐநாவின் யுனஸ்கோ. கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றியுள்ள இத்தீர்மானத்தின் படி அல்குத்ஸ் பகுதியில்“பொய்களின் அடிப்படையில் இஸ்ரேல் உரிமை கொண்டாடுகிறது” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் இப்பகுதியை ஆக்கிரமித்தது.. அன்றுமுதல் பாலஸ்தீனர்கள் இப்பகுதியில் பிராத்தனை செய்வதில் பலவிதமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவருகிறது. இதனால் பல மோதல்களும் அரங்கேறியுள்ளது. மேலும் தங்களின் எதிர்கால தலைநகர் ஜெருசலேம் தான் என்று இஸ்ரேல் பிரட்சாரமும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. இதன் மூலம் பூர்வீக பாலஸ்தீனர்களின் நிலை கேள்விக்குரியாகியுள்ளதாக பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *