Breaking
Wed. Apr 24th, 2024

(ஏ.கே.எம். சியாத்)

ஜமாஅத் அன்சாரி சுன்னத்தில் முகம்மதியா அமைப்பின் உதவியுடன் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலகம், அளவக்கை சிறுக்குளம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜும்ஆ பள்ளிவாசலுடன் கூடிய இஸ்லாமிய நிலையத் திறப்பு நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22.04.2016) ஜும்ஆ வைபவத்துடன் நடைபெற ஏற்பாடாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த வடக்கு முஸ்லிம்கள் 1990 ம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இப் பள்ளிவாசல் புலிகளால் அழிக்கப்பட்டது. கடந்த இரண்டு தசாப்தாங்களாக வடக்கு முஸ்லிம்கள் வெளி மாவட்டங்களில் அகதிகளாக வாழ்ந்த நிலையில் எமது நிலம், குடியிருப்புக்கள், பள்ளிவாசல் என்பன சிதைவடைந்து காடுகளாயின.

அல்ஹம்துலில்லாஹ், யுத்த முடிவின் பின்னர் எமது மக்கள் தமது சொந்த நிலத்தை வெட்டியும் கொத்தியும் துப்பரவு செய்து மீண்டும் மீள்குடியேறி வாழ்ந்து வரும் நிலையில், எமது கிராமத்தில் அமையப் பெற்றுள்ள ஜும்ஆ பள்ளிவாசல், மதரசா கட்டிடம், நீர் விநியோகம், வீட்டு, கடைத்தொகுதி உள்ளடங்கிய இஸ்லாமிய நிலையம் வணக்க வழிபாடுகள் மற்றும், கல்வி நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குமான மத்திய நிலையமாக தொழிற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *