Breaking
Sat. May 18th, 2024

காஷ்மீர் போராட்டத்துக்கு இறுதி வரை பாகிஸ்தான் ஆதரவளிக்கும்’ என அந்நாட்டு தூதர் அப்துல் பாசித், தலைநகர் டெல்லியிலேயே பகிரங்கமாக பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என, அனைத்து கட்சி தலைவர்களும் கொந்தளித்துள்ளனர். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் பர்கான் வானி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த விஷயத்தில் வன்முறையை தூண்டி விடும் பாகிஸ்தான், பர்கான் வானியை தியாகியாக வர்ணிக்கிறது. பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணையும் நாளுக்காக காத்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார்.

இதைத்தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது. நவாஸ் ஷெரீப் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியே. அங்கு பாகிஸ்தான் அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து, உலக நாடுகளின் முன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்’ என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் கொளுந்துவிட்டு எரியும் நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், ‘காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும்’ என தலைநகர் டெல்லியிலேயே பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாகிஸ்தானின் 70வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்துல் பாசித் பேசுகையில், ‘இந்தாண்டு சுதந்திர தினத்தை காஷ்மீர் மக்களின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் தியாகம் வீண் போகக் கூடாது. அங்கு நடக்கும் அமைதியின்மை முடிவுக்கு வர வேண்டும். காஷ்மீர் மக்கள் சுய முடிவெடுக்கும் உரிமையை பெறும்வரை அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும். எவ்வளவு படையை உபயோகித்தாலும், ஜம்மு காஷ்மீர் மக்களின் அரசியல் ஆர்வத்தை அடக்க முடியாது. அவர்களின் சுதந்திர இயக்கம் நியாயமான முடிவை எட்டும்’’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.அவரது பேச்சால் அனைத்து கட்சி தலைவர்களும் ெகாந்தளித்துள்ளனர். அப்துல் பாசித்தை உடனடியாக நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசும் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறுகையில், ‘இந்தியாவை குறை கூற பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும் கிடையாது. முதலில் தங்கள் முதுகில் உள்ள கறையை துடைத்துவிட்டு, மற்றவர்கள் விஷயத்தில்  9ம் பக்கம் பார்க்கபுதுடெல்லி: ‘காஷ்மீர் போராட்டத்துக்கு இறுதி வரை பாகிஸ்தான் ஆதரவளிக்கும்’ என அந்நாட்டு தூதர் அப்துல் பாசித், தலைநகர் டெல்லியிலேயே பகிரங்கமாக பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என, அனைத்து கட்சி தலைவர்களும் கொந்தளித்துள்ளனர். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் பர்கான் வானி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த விஷயத்தில் வன்முறையை தூண்டி விடும் பாகிஸ்தான், பர்கான் வானியை தியாகியாக வர்ணிக்கிறது. பாகிஸ்தானுடன் காஷ்மீர் இணையும் நாளுக்காக காத்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினார்.

இதைத்தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது. நவாஸ் ஷெரீப் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியே. அங்கு பாகிஸ்தான் அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து, உலக நாடுகளின் முன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்’ என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் கொளுந்துவிட்டு எரியும் நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், ‘காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும்’ என தலைநகர் டெல்லியிலேயே பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாகிஸ்தானின் 70வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்துல் பாசித் பேசுகையில், ‘இந்தாண்டு சுதந்திர தினத்தை காஷ்மீர் மக்களின் சுதந்திரத்துக்காக அர்ப்பணிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் தியாகம் வீண் போகக் கூடாது. அங்கு நடக்கும் அமைதியின்மை முடிவுக்கு வர வேண்டும். காஷ்மீர் மக்கள் சுய முடிவெடுக்கும் உரிமையை பெறும்வரை அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும். எவ்வளவு படையை உபயோகித்தாலும், ஜம்மு காஷ்மீர் மக்களின் அரசியல் ஆர்வத்தை அடக்க முடியாது. அவர்களின் சுதந்திர இயக்கம் நியாயமான முடிவை எட்டும்’’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.அவரது பேச்சால் அனைத்து கட்சி தலைவர்களும் ெகாந்தளித்துள்ளனர். அப்துல் பாசித்தை உடனடியாக நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசும் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறுகையில், ‘இந்தியாவை குறை கூற பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும் கிடையாது. முதலில் தங்கள் முதுகில் உள்ள கறையை துடைத்துவிட்டு, மற்றவர்கள் விஷயத்தில்  பாகிஸ்தான் அறிவுரை கூறட்டும். காஷ்மீர் விவகாரத்தில் எங்களின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இப்போதைக்கு நிலுவையில் உள்ள ஒரே பிரச்னை என்றால், கடந்த 60-65 ஆண்டாக சட்டவிரோதமாக காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ளதுதான். அதை மீட்டு இந்தியாவுடன் சேர்ப்போம். அதுவே நமது உண்மையான வெற்றி. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசோ அதன் அதிகாரிகளோ குழப்பத்தை ஏற்படுத்த முயன்றால் அதற்கான விளைவை சந்திப்பார்கள்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் விரைவில் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்காக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வாய்ப்பு உள்ளது அல்லது பாகிஸ்தானுக்கு அதன் மண்ணிலேயே இன்று, இந்திய தூதரகத்தில் நடக்கும் சுதந்திர தினத்தில் நமது தூதர் பதிலடி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாகாவில் இனிப்பு: எல்லையில் துப்பாக்கி சூடு

பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாகா எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் (எல்லை வீரர்கள்), இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு இனிப்புகள் வழங்கினர். ஆனால் அதே நேரத்தில் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இரண்டு இடங்களில் நேற்று காலை 3 மணியளவில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச்சூடு நடந்தது. இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் மனீஷ் மேத்தா தெரிவித்தார். நான்கு மாத இடைவெளிக்குப்பின் பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *