Breaking
Sun. May 19th, 2024

“தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” என்ற தலைப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருட்டு புத்தகம் ஒன்று வெளியானது. விலை உயர்ந்த தரத்தில் அச்சிடப்பட்ட இந்த புத்தகத்தினை முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள்தான் இதனை அச்சிட்டுள்ளார் என்ற சந்தேகம் பரவலாக காணப்பட்டது.

பின்பு இது அச்சிடப்பட்ட அச்சகம் தொடக்கம் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்ததன் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோர் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அவர்களது முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பில் உள்ள பொலிஸ் குற்ற புலனாய்வு அதிகாரிகளினால் பசீர் சேகுதாவூத் அவர்கள் இன்று நண்பகல் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

குற்றப்புலனாய்வு பிரிவுக்கு செல்லும்போது பசீர் சேகுதாவூத் அவர்கள் சட்டத்தரணியாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களை அழைத்து சென்றிருந்தார்.

விடயம் என்னவென்றால் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உத்தியோகபூர்வ சட்டத்தரணியும், அதன் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் ஆஸ்தான சட்டத்தரணியுமாவார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தனிப்பட்ட மற்றும் அவரது கட்சி சார்ந்த அனைத்து வழக்குகளும் சிராஸ் நூருதீன் அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அத்துடன் கடந்த காலங்களில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குட்ப்பட்ட நிறுவனம் ஒன்றுக்கு தவிசாளராக பதவி வகித்திருந்தார்.

பசீர் சேகுதாபூத் அவர்களுக்கு எத்தனையோ பரீட்சயமான உயர் நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருக்கும்போது சிராஸ் நூர்தீன் அவர்களை இன்று தன்னுடன் அழைத்து சென்றதன்மூலம் இதன் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இயக்குகிறார் என்பது ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்படுகின்ற அனைத்து குழப்பங்களும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்தான் பின்னணியில் உள்ளார் என்ற சந்தேகம் கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் கட்சி போராளிகள் மத்தியில் இருந்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *