பிரதான செய்திகள்

தாஜுதீன் கொலை: சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை நிராகரிப்பு

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதின் கொலை வழக்கில், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் முன்பிணை கோரிக்கையை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தாஜுதினின் சடலத்தின் பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தான் கைதுசெய்யப்படலாம் என்பதால், தனக்கு முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது, பிணை வழங்குவது விசாரணைக்குப் பாதகமாக அமையும் எனத் தெரிவித்த நீதவான், முன்பிணை மனுவை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார்.

Related posts

அவதானம் . ! ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில்…

Maash

முசலி பிரதேச Champion ஆக மணற்குளம் இளைளுர் கழகம்

wpengine

அரசியல் இருப்புக்காக இனவாத விஷசம் கக்கவேண்டாம்-அமைச்சர் றிஷாட் ஆதங்கம்

wpengine