Breaking
Thu. May 9th, 2024

(நாச்சியாதீவு பர்வீன் /ஏ.ஆர்.எம்.ரபியுதீன்)

முஸ்லிம்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்களே,அவர்களுக்கு இந்த நாட்டின் அனைத்து உரிமைகளும் உண்டு,இன ரீதியாக,மத ரீதியாக நாம் பிரிந்து இருந்து கடந்த காலங்களில் நாம் கசப்பான பல அநுபவங்களை நாம் அனுபவித்துள்ளோம். எனவே மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு ஹிதோகம பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட முஸ்லிம் கிராமத்வர்களுக்கான விருந்துமசாரத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்..

என்னிடம் எந்தவித பாகுபாடும் இல்லை இந்த பிரதேசத்தில் நிரந்தரமான சமாதானமும், ஒற்றுமையும் இருக்க வேண்டும்.சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிப்பதிலும்,அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் நான் தயங்க மாட்டேன்.சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பதற்காகவே எம்மை அரசு நியமித்துள்ளது. அதனை நான் பாரபட்சமின்றி நிறைவேற்றுவேன்.
ஒவ்வொறு மதமும் நல்லவிடயங்களையே சொல்லுகின்றன. குறிப்பிட்ட மதத்தினர் அவர்கள் மதத்தினை ஒழுங்காக பின்பற்றினாலே போதும் இங்கு நிலவுகின்ற அனேக பிரச்சினைகள் தீரும். எல்லா மதங்களும் உண்மையையும்,நல்லொழுக்கங்களையும் போதிக்கின்றன.9c59831f-5d30-47f8-84cc-4819e8157867

இந்தப்பிரதேசத்தில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசைகள் செய்கின்றனர்.கடந்த காலத்தில் ஏற்பட்ட இன ரீதியான முறுகல்கள் இந்தப்பிரதேசத்தில் இடம் பெற நாம் இடம் கொடுக்கவில்லை. இந்த பிரதேசத்திலுள்ள பெளத்த விகாரைகளின் விகாராதிபதிகள் முஸ்லிம்களின் பாதுகாவலர்களாக திகழ்ந்தார்கள். அவ்வாறே முஸ்லிம்களும் சிங்களவர்களோடு மிகவும் அன்னியோன்யமாக பழகுகின்றார்கள்.இது தான் வெற்றி இந்த ஒற்றுமையை நாம் நாடு முழுவதும் காண வேண்டும் என அவர் கூறினார்.0f3577a9-496f-41cd-a818-8e471f4a2013
இந்த நிகழ்வில் நாச்சியாதீவு,நெலுபாவ மற்றும் சிராவஸ்திபுர பிரதேசங்களையச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்களும், நாச்சியாதீவு ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் சி.அமீரான், உபதலைவர் ஏ.ஆர்.எம்.பர்வீன், நிர்வாக உத்தியோகத்தர் எச்.எம்.இஸ்மாயில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாஹூல் ஹமீட், நாச்சியாதீவு மு.ம.வி. அதிபர் சஹீட் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *